Primary Menu

Top Menu

August 16, 18

ரஷ்யாவுடனான அமெரிக்க உறவு மிகச்சிறப்பாக இருக்கும் – அதிபர் டிரம்ப் உறுதி

ரஷ்யாவுடனான அமெரிக்க உறவு மிகச்சிறப்பாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கணித்துள்ளார்.

 

ஃபின்லாந்தின் தலைநகர் ஹெல்ஸின்கியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

இருவரும் அந்நாட்டு அதிபர் மாளிகையில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

அப்போது பேசிய டிரம்ப், வெளிப்படையாக சொன்னால், இருநாடுகளும் இதுவரை இணக்கமான உறவில் இல்லாமலிருந்ததாக சுட்டிக்காட்டினார்.

 

உலக நாடுகள் இரு நாடுகளையும் இணைந்து செயல்படுவதைக் காண விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

இதைத்தொடர்ந்து பேசிய ரஷ்ய அதிபர் புதின் பதற்றமான விவகாரங்கள் குறித்தும், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணும் நேரம் வந்துவிட்டதாகக் கூறினார்.

 

இருவரும் தங்களது பரஸ்பர நட்பு நாடானா சீனாவைப் பற்றி வெகுநேரம் பேசியதாகவும் தெரிவித்தனர்.

 

முன்னதாக டிரம்ப் ரஷ்யாவுடனான உறவு ஒருபோதும் மோசமானதில்லை என்றும் முந்தைய ஆட்சியாளர்களை மறைமுகமாக சாடி அவர்கள் முட்டாள்தனமாக இருந்ததாகவும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon