Primary Menu

Top Menu

September 21, 18

எண்ணெய் நிறுவனங்களின் டிஜிட்டல் பரிவர்த்தனை சலுகை திடீர் குறைப்பு

பெட்ரோல், டீசல் போடும் போது, ‘டிஜிட்டல்’ முறை பண பரிவர்த்தனைக்கு வழங்கி வந்த சலுகையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.

 

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கப்படுத்த, தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை வழங்கும்படி, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.

 

இதையடுத்து, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்,

 

தலா ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு ‘டெபிட், கிரெடிட் கார்டு’ வாயிலாக பண பரிவர்த்தனை மேற்கொண்டால், 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கின. இது, தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பின் தலைவர் முரளி கூறுகையில்,

 

”டிஜிட்டல் பரிவர்த்தனையில், பெட்ரோல், டீசல் போடும் போது, 0.75 சதவீதமாக இருந்த தள்ளுபடி, ஆக., 1ல் இருந்து, 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

 

இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனை மீதான ஆர்வம் குறையும்,” என்றார்.

 

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon