Primary Menu

Top Menu

September 25, 18

பெட்ரோல் , டீசல் உயர்வு போராட்டத்தில் கலந்து கொண்டாரா தோனி..? – வைரல் புகைப்படம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கடந்த திங்கள் கிழமை எதிர்க்கட்சிகள் நடத்திய நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரா் மகேந்திர சிங் தோனி பங்கேற்றதாக புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில தினங்களாக விண்ணை முட்டும் அளவிற்கு உயா்ந்து வருகிறது.

 

விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.

 

இந்நிலையில் முழு அடைப்பு போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரா் மகேந்திர சிங் தோனி, அவரது மனைவி சாக்ஷி உள்ளிட்டோர் பெட்ரோல் நிலையத்தில் அமா்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon