Primary Menu

Top Menu

September 24, 18

மனநோயாளிகளுக்கு பதில் தர அவசியமில்லை – தயா பதிலடி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை டிவிட்டரில் “ஓசி சோறு” என்று வயது வித்தியாசம்கூட பாராமல் விமர்சித்த மு.க.அழகிரியின் மகன் தயா அழகிரி தற்போது பாஜகவின் சுப்பிரமணிய சுவாமியை “மனநோயாளி” என்று விமர்சித்திருக்கிறார்.

 

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி (ஆகஸ்ட் 7) காலமானார். கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர்தான் மு.க.அழகிரி அரசியலிலும், அழகிரியின் மகன் தயா அழகிரி டிவிட்டர் அரசியலிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்பது உறுதியாகிவிட்டாலும் கட்சியில் அழகிரியை மீண்டும் இணைப்பது பற்றி எந்தத் தகவலுமே வெளியாகவில்லை என்பது இந்த தீவிரத்துக்குக் காரணம்.

 

இந்தக் குமுறல்தான், மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அழகிரி “எனது தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன்; அது இப்போது தெரியாது,

 

தந்தையின் விசுவாசிகள் அனைவரும் என் பக்கமே உள்ளார்கள். இதற்கு காலம் பதில் சொல்லும். எனது ஆதங்கம் கட்சி தொடர்பானது. தமிழகம் முழுவதும் உள்ள உண்மையான விசுவாசிகள் என்னை ஆதரிக்கிறார்கள்” எனப் பேட்டியாக பிரதிபலித்தது.

 

தொடர்ந்து, ” நான் திமுகவுக்கு மீண்டும் வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை. நான் வந்தால் வலிமையான தலைவராகி விடுவேன் என அச்சப்படுகிறார்கள். திமுக தலைவர்கள் பலர் ரஜினியுடன் தொடர்பில் உள்ளனர்.

 

திமுகவில் கட்சிப்பொறுப்புகள் விற்கப்படுகின்றன. இப்போதுள்ள தலைவர்கள் கட்சியை அழித்து விடுவார்கள்” என்று கொந்தளிப்பாக வெளிப்பட்டது.

 

அழகிரியின் இந்த கருத்துகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “வீட்டில் இருப்பவர்கள் பற்றி கேளுங்கள். வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்கள் பற்றி கேட்க வேண்டாம்” என்றார்.

 

இதற்கு பதிலடியாக கி.வீரமணியை “காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்”என மிகவும் கடுமையாக விமர்சித்தார் தயா அழகிரி. தற்போது சுப்பிரமணிய சுவாமி பற்றியும் காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில்தான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சுவாமி, “திமுகவில் நுழையவிருக்கும் அழகிரி இட்லி கடையை மட்டும் தான் வைக்க முடியும்” எனக் கூறினார்.

 

இதை சுட்டிக்காட்டி, “அழகிரியால் இட்லி கடை மட்டும்தான் வைக்க முடியும் என்று பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி விமர்சித்திருக்கிறார். ஆனால், அவரை எல்லாம் ஒன்றும் பேசாத தயா அழகிரி கி.வீரமணியின் கருத்துக்கு மட்டும் பொங்குவதேன்.

 

ஆசிரியர் என்றால் பாய்வதும் ஆரியர் என்றால் பம்முவதும் ஏன்?” என டிவிட்டரில் எழுப்பப்பட்டுள்ள கேள்வி எழும்பியுள்ளது.

 

Comments

புதுச்சேரியில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் அறிமுகம்

புதியதாக அறிமுகப்படுத்துள்ள ஆயுஷ்மான்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon