Primary Menu

Top Menu

August 16, 18

வங்கிகளில் அபராதமாக ரூ.4,988 கோடி வசூலிப்பு

வங்கிகளில் , குறைந்தபட்ச வைப்பு தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து அபராதமாக ரூ.4,988 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 

இது தொடர்பாக நிதித்துறை இணையமைச்சர் பிரதாப் சுக்லா லோக்சபாவில் தாக்கல் செய்த அறிக்கையில்,

 

கடந்த 2017 -18 நிதியாண்டில் ஜன்தன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்கில் குறைந்தபட்ச வைப்பு தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

 

அதிகபட்சமாக ஸ்டேட் வங்கி ரூ.2,434 கோடி அபராதம் வசூலித்துள்ளது.

அபராத விவரம்

ஸ்டேட் வங்கி – ரூ.2,434 கோடி

எச்டிஎப்சி – 590 கோடி

ஆக்சிஸ் -530 கோடி

ஐசிஐசிஐ-317 கோடி

பஞ்சாப் நேஷனல் வங்கி – 211 கோடி என அபராதம் வசூலித்துள்ளன.

 

ஸ்டேட் வங்கி 2018 ஜனவரி முதல் ஜூலை 31 வரை மட்டும் ரூ.1700 கோடி அபராதம் வசூலித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon