Primary Menu

Top Menu

September 26, 18

உறியடி திருவிழாவில் இளைஞர் ஒருவர் பலி – 36 பேர் காயம்

ஜன்மாஷ்டமியை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற உறியடி கொண்டாட்டத்தில் இளைஞர் ஒருவர் பலியானதுடன், 36 பேர் காயமடைந்தனர்.

 

கிருஷ்ண ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக வடமாநிலங்களில் மனித பிரமிடுகள் அமைத்து உறியடி நடைபெறுவது வழக்கம். இந்த முறையும் மும்பையில் பல்வேறு இடங்களில் உற்சாகமாக உறியடி திருவிழா கொண்டாடப்பட்டது.

 

கோவிந்தாஸ் என்றழைக்கப்படும் இளைஞர்கள் வண்ண உடைகள் அணிந்து, பல அடுக்குகள் கொண்ட மனித பிரமிடுகள் அமைத்து உறியடித்தனர். மாற்றுதிறனாளி இளைஞர்களும் இதில் கலந்து கொண்டனர்.

 

இந்த உறியடி திருவிழவில் பங்கேற்ற தாராவி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு பலியானதாகவும், 36 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon