Primary Menu

Top Menu

September 24, 18

கலைஞரின் உடல்நிலை பற்றி அறிய விடிய விடிய காத்திருந்த தொண்டர்கள்

கருணாநிதி-யின் உடல்நிலையை தெரிந்துகொள்வதற்காக காவேரி மருத்துவமனை முன்பு, விடிய விடிய தொண்டர்கள் காத்திருந்தனர்.

 

இன்று நல்ல செய்தி வரும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் பல வேண்டுதல்களை செய்து வருகின்றனர்.

 

எழுந்து வா தலைவா…எழுந்து வா தலைவா… இந்த முழக்கம், காவேரி மருத்துவமனையில் இரவு முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. கருணாநிதியின் உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வெளியானதும், காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் குவிந்தனர்.

 

இரவு 12 மணியை அடைந்தபோதிலும், விடிய, விடிய மருத்துவமனையிலேயே காத்திருந்தனர். கருணாநிதியின் புகழை வெளிப்படுத்தும் வகையிலான பாடல்களை ஒலிக்க விட்டு, நடனமாடினர். எழுந்து வா தலைவா என்று முழக்கமிட்டனர்.

 

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோசஸ் என்பவர், கருணாநிதி நலம்பெற வேண்டும் என்று மருத்துவமனையைச் சுற்றி அங்க பிரதட்சனம் செய்தார்.

அதன்பின் வடசென்னையைச் சேர்ந்த அனுசுயாதேவி என்ற பெண், கருணாநிதியின் உடல்நிலையை தெரிந்து கொள்வதற்காக மருத்துவமனையிலேயே இருப்பதாக தெரிவித்தார்.

 

குடும்ப உறுப்பினர்களையும், பசியையும் மறந்து, கருணாநிதி குறித்த நல்ல செய்திக்காக மருத்துவமனையிலேயே காத்திருப்பதாக கூறிய அவர், இன்று நல்ல செய்தி வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

இவரைப் போலவே, பலரும் விடிய விடிய மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தனர். ஒரு சிலர், சாலைகளிலும், இருசக்கர வாகனங்களிலும் படுத்து உறங்கினர். இதனால் மருத்துவமனை வளாகம் விடிய விடிய பரபரப்புடன் காணப்பட்டது.

 

Comments

புதுச்சேரியில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் அறிமுகம்

புதியதாக அறிமுகப்படுத்துள்ள ஆயுஷ்மான்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon