Primary Menu

Top Menu

September 25, 18

கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

 

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார்.

 

அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், காவேரி மருத்துவமனையில் இருந்து அவரது உடல் முதலில் கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து அங்கு திமுக தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் குவிய தொடங்கினர்.

 

அதன்பின் நள்ளிரவு சிஐடி காலனியில் உள்ள இல்லத்திற்கும் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர்.

 

அதனைத் தொடர்ந்து, இன்று விடியற்காலை பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி அரங்கிற்கு ஆர்.கே சாலை வழியாக வான்மழை பொழிய மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

 

ஏற்கனவே அங்கு குவிந்திருந்த திமுக தொண்டர்களும் பொதுமக்களும் கண்ணீருடன் கலைஞர் உடல் வந்த வாகனத்தை நோக்கி சென்று பார்த்து வணங்கினர். அதன் பின்னர் பொதுமக்கள் பார்க்கும்படி அவரது உடல் வைக்கப்பட்டது.

 

அதன் அருகே இன்று காலை பதியப்பட்ட முரசொலி பத்திரிகை வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பல அரசியல்வாதிகளும் பிரபலங்களும் காலை முதலே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon