Primary Menu

Top Menu

August 16, 18

புதுச்சேரியில் கல்வி கட்டண உயர்வை குறைக்க திமுக கோரிக்கை

புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் கட்டண உயர்வை குறைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வருக்கு தி.மு.க., கோரிக்கை வைத்துள்ளது.

 

இதுகுறித்து சிவா எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:

 

ஏழை மாணவர்கள் மருத்துவம் பயில வேண்டும் என்ற நோக்கில், கடந்த தி.மு.க., ஆட்சியில் தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, 50 சதவீத இடங்கள் அரசு பங்காக அளிக்க வேண்டும் என்ற உடன்படிக்கையின்படி, அனுமதி அளிக்கப்பட்டது.

 

தி.மு.க., ஆட்சிக்கு பிறகு, இந்த உடன்பாடு கைவிடப்பட்டு, அரசு ஒதுக்கீடு 25 சதவீதத்திற்கும் குறைந்து விட்டது.

 

ஆரம்பத்தில் சில ஆயிரமாக இருந்த கல்வி கட்டணம், பல லட்சங்களை தாண்டியுள்ளது.

 

நீதிபதி ஆதிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட கட்டணக் குழு, வரும் ஆண்டுகளுக்கான கட்டணமாக ரூ. 16 லட்சம் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

 

இது மாணவர்களுக்கு சுமையாகவும், தனியார் கல்லுாரிகளுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.

 

முதல்வர் தலையிட்டு, இதுபற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டு மருத்துவக் கல்லுாரிகளின் கல்விக்கட்டணத்தை குறைக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

 

இதேநிலை தொடருமானால் மாணவர்களையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon