Primary Menu

Top Menu

July 17, 18

வடிவேலுவின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வருவதாக தகவல்

பாதியில் நின்ற வடிவேலுவின் இம்சை அரசன் பார்ட் 2 வின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் வடிவேலு இறங்கி வந்து இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் இம்சை அரசன் படக்குழு மறுத்துள்ளது.

 

வடிவேலு இன்னும் பிடிவாதம் பிடித்தே வருகிறார். இதனால் படக்குழு தயாரிப்பாளர் சங்கத்திடம் சென்று இருக்கிறது.

 

சங்க நிர்வாகிகளுக்கும் வடிவேலு சரியான பதில் அளிக்கவில்லை. எனவே வடிவேலு நடிக்க தடை என்று ரெட்கார்டு போடப்படுவது உறுதி.

 

ஏற்கனவே வடிவேலு நடிப்பதாக இருந்த படங்களில் இருந்தும் அவர் கழற்றிவிடப்பட்டு விட்டார்’ என்று கூறுகிறது படக்குழு.

 

வடிவேலு மீது ரெட்கார்டு போடப்பட்டால் அவரது சினிமா வாழ்க்கையே முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கவலை தெரிவிக்கின்றனர் சினிமா ரசிகர்கள்.

 

வைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்!

சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின்...

Leave a Reply