Primary Menu

Top Menu

August 18, 18

சிறுமி பலாத்காரத்தில் கைதான 17 பேருக்கு வக்கீல்கள் தர்ம அடி

சென்னையில் சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவத்தில் கைதான 17 பேர் மீது கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தினர்.

 

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நவீன் என்பவரின் 7 ம் வகுப்பு படிக்கும் 2வது மகளை பலாத்காரம் செய்ததாக 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட 17 பேரை போலீசார் சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின் சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வழக்கறிஞர்கள், 17 பேரையும் சுற்றிவளைத்து கடுமையாக தாக்கினர். அடித்து உதைத்தனர்.

 

போலீசார் அவர்களை கட்டுப்படுத்தி 17 பேரை மீட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்: இந்த குற்றவாளிகளுக்கு யாரும் ஆஜராக கூடாது என முடிவு செய்துள்ளோம்.

 

மீறி ஆஜரானால் அவர்களை சங்கத்தில் இருந்து விலக்க முடிவு செய்வோம். ஜாமின் வழங்க கூடாது. கடும் தண்டனை வழங்க வேண்டும். இந்த குற்றவாளிகளுக்கு யாரேனும் ஆதரவாக வந்தால் எதிர்ப்பு தெரிவிப்போம்.

 

சட்ட ரீதியாக போராடுவோம். இலவச சட்ட ஆணையத்தின் மூலமும் யாரும் ஆஜராக கூடாது என கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon