Primary Menu

Top Menu

September 25, 18

மிருகவதை தடை என்னும் பெயரில் வணிக அரசியல்

இந்த உலகம் எல்லா உயிரினங்களுக்கும் சமமானது ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இந்த உண்மையை மறந்து மனிதர்களுக்குக்கு மட்டும் தான் இந்த உலகம் சொந்தம் என்பதை போல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் நம்மில் பலர்.

 

காட்டுக்குள் சென்று இயந்திரங்கள் உதவியால் வேட்டையாடி வீரம் என்றோம் , காடுகளை அழித்து வீடுகளைக்கட்டி ஊர் என்றோம். மிருகங்கள் ஊருக்குள் வந்து தொந்தரவு செய்ததால் கொன்றுவிட்டோம் என்று பழியையும் பாவம் மிருகங்கள் மீதே போட்டோம்.

 

இவற்றையெல்லாம் எதிர்த்து வேறு எந்த நோக்கமும் இல்லாமல் உண்மையாக போராடும் விலங்குகள் நல அமைப்புகளுக்கும் விலங்குகள் நல ஆர்வலர்களுக்கும் நன்றிகள் கோடி.

 

ஆனால் விலங்குகள் நல அமைப்புகள் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் திருடர்கள் பற்றிய கட்டுரை இது. யாரைப்பற்றி சொல்கிறேன் என்பது படிக்கும் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.

 

ஆம் பீட்டா ( PETA ) போன்ற இடை தரகர்களைத்தான் சொல்கிறேன். இவர்களின் செயல்களை நிதானமாக யோசித்து பார்த்தாலே இவர்களின் நோக்கம் புரிந்துவிடும்.

 

வேறு நாடுகளில் இவர்கள் என்னென்ன செய்தர்களோ எனக்கு அந்த அளவுக்கு தெரியாது. ஆனால் மிருகவதை தடை என்ற பெயரில் இந்தியாவை குறிவைத்து செய்த அனைத்து செயல்களுமே நம் தலைமுறையையும் அடுத்த தலைமுறையினரையும் நோயாளியாகவும் கடனாளியாகவும் மாற்றி சம்பாதிக்கவே.

 

இதுவரை பீட்டா அவர்களின் சாதனைகளாக சொல்வது மருத்துவ பரிசோதனையிலிருந்து காப்பாற்றிய குரங்குகளைப்பற்றி தான். எய்ட்ஸ் நோய்க்கே மருந்து கண்டுபிடித்தாலும் அதை விலங்குகள் மீது பரிசோதனை செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள்.

 

இவர்கள் என்ன செய்ததாலும் அதன் பின்னால் ஒரு மருத்துவ உலகை சார்ந்த பின்னணி இருப்பது ஏன்??

 

ஆம் இவர்களுக்கு பின்னால் இருப்பது சில குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்த முன்னணி மருந்து நிறுவனங்கள் இந்திய மருத்துவ உலகை இன்று ஆண்டுகொண்டிருப்பதும் அவர்களே. அவர்களின் கைக்கூலி தான் பீட்டா.

 

ஆனால் இத்தகைய கூட்டம் நம்மை பார்த்து தமிழன் காட்டு மிராண்டி( BARBARIC TAMILS ) என்கிறது.

 

பறவை இனப்பெருக்கம் பாதிப்படையும் என்ற ஒரே காரணத்தினால் தீபாவளியை கொண்டாடாத கிராமங்கள் பல இருக்கிறது தமிழ்நாட்டில், எங்களைகாட்டு மிராண்டி என்று சொல்ல இவ்வுலகில் எவருக்குமே தகுதியில்லை .

 

கோழி சண்டை தடை செய்யப்பட்டதின் பின்னணியும் பின் விளைவுகளும்:

 

தன் இருப்பிடத்தை காப்பாற்றிக்கொள்ளவும் இனப்பெருக்கத்தின் போது தன் ஆதிக்கத்தை நிலை நாட்டவும் சண்டையிடக்கூடிய குணம் கொண்டவை தான் நம் நாட்டு சேவல்கள்.

 

இவற்றை பொழுபோக்கிற்காகவும் இந்த இனத்தை காப்பாற்றிடவும் சேவல் சண்டையை நடத்தி வந்தனர். இதை மிருகவதை என்னும் அடிப்படையில் தடைசெய்தார்கள். இந்த சமயத்தில் பரவியது தான் கறிக்கோழிகள் (broiler chiken ).

 

பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணை, எஞ்சியுள்ள தீவனப்பொருட்கள், வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் போன்றவற்றை உண்டு வாழ்பவைதான் நம் நாட்டுக்கோழி மற்றும் எந்த தட்ப வெப்ப நிலையையும் தாங்க கூடியவை.

 

ஆனால் கறிக்கோழி அப்படியல்ல அவற்றிற்கு பிரத்யேக தீவனமும் சீரான தட்பவெட்ப நிலையும் அவசியம் தடுப்பூசிகளும் மருந்துகளும் இல்லாமல் கறிக்கோழியை வளர்க்கவே முடியாது. அந்த மருந்துகளை விற்பவர்கள் மேற்சொன்ன அதே மருந்து நிறுவனங்கள் தான்.

 

இதோடு முடியவில்லை நாட்டுக்கோழியை சாப்பிவிடுவதால் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதே நேரத்தில் கறிக்கோழியை சாப்பிடுவதால் எண்ணற்ற தீங்குகள், 6-8 வயது நிரம்பிய பெண் குழந்தைகள் கூட வயதுக்கு வந்துவிடுகிறார்கள்.

 

அதற்கும் முக்கிய காரணம் இந்த கறிக்கோழி தான், மற்றும் இந்த கறிக்கோழி எலும்புகளை பலவீன படுத்துகிறது என்றும் சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 

இது போன்ற நோயை குணமாக்கும் மருந்து, குழந்தைகள் சிறிய வயதிலேயே வயதுக்கு வரமால் இருப்பதற்கு போடப்படும் தடுப்பூசி என அனைத்தும் அந்த மருந்து நிறுவனங்கள் தான் நமக்கு விற்கிறது .

 

பீட்டா போன்ற அமைப்புகள் கறிக்காகவே கொல்லப்படும் கறிக்கோழிகளுக்கு உயிரில்லை என்பதைப்போல இதற்க்கு எதிராக எதுவும் செய்யாமல் இருப்பது ஏன் ???

 

இது மிருகவதை இல்லையா அல்லது இந்த கோழிகளுக்கு உயிரில்லையா???? ஏனென்றால் இதில் இவர்களுக்கு லாபம் ஏதும் இல்லை,

 

மாறாக இவர்கள் எதிர்பார்த்ததை போலவே கறிக்கோழிகளை பரப்பிவிட்டார்கள் அதை எதிர்த்து அவர்களே ஏன் போராட வேண்டும்???

 

கசப்பான உண்மைகள் தொடரும் …..

 

Comments

கடவுளின் முட்டாள்தனம்!!

நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon