Primary Menu

Top Menu

September 23, 18

செல்போனில் தொடர்ந்து பேசியதால் அக்காவை கொலை செய்த தம்பி கைது !

உறங்கும் போது செல்போனில் பேசியதால், அக்காவை தம்பியே கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான மாணவி, தனது நண்பருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

 

அதாவது பிற்பகல் தொடங்கி, இரவு வரை தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் உறங்கச் சென்ற அவரது 16 வயதான தம்பிக்கு மிகவும் தொந்தரவாக இருந்துள்ளது.

 

இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த திங்கள் அன்று நடந்த சண்டையில், அக்காவின் கழுத்தை தம்பி நெரித்துள்ளான்.

 

இதில் மூச்சுத் திணறி அக்கா உயிரிழந்துள்ளார். உடனே தனது நண்பர்களை அழைத்து, உடலை அப்புறப்படுத்தியுள்ளான்.

 

இதனை அருகில் இருந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் கவனித்துள்ளனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுவனை கைது செய்தனர்.

 

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon