Primary Menu

Top Menu

September 25, 18

பிட் காயின், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடி

ஹைதராபாத்தில் டிஜிட்டல் பணத்தில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.

 

பிட் காயின், கிரிப்டோ கரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்வதாகக் கூறி ஹைதராபாத் அருகே பழைய போவன்பள்ளி என்ற இடத்தில் தனியார் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.

 

இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற போலீசார் ஜிஆர்எம் எஸ்டேட்ஸ் என்ற நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது அந்த நிறுவனத்தினல் அனுமதியின்றி டிஜிட்டல் பணத்தில் முதலீடு செய்வது தெரியவந்தது.

 

இதையடுத்து அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் பணம், கம்ப்யூட்டர்கள், லேப்டாப் மற்றும் பிரிண்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

 

இதுதொடர்பாக கர்தாஸ் ரமேஷ் என்பவர் உள்பட 5 பேரை போவன்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon