Primary Menu

Top Menu

September 23, 18

பெட்ரோல் , டீசல் உயர்வை கண்டித்து இன்று பாரத் பந்த்!

பெட்ரோல் – டீசல் விலை உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் இன்று நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.

 

பாரத் பந்த் காரணமாக ஒடிசாவில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆந்திரமாவின் விமாகப்பட்டினம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

 

தெலுங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரசார் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றன. இதே போன்று ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் கட்சிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

குஜராத்தில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்து, பஸ்களை நிறுத்தி உள்ளனர். இதனால் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

 

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon