Primary Menu

Top Menu

September 20, 18

பி.எட் மதிப்பெண் சான்றிதழில் நடிகர் அமிதாப் புகைப்படம் – மாணவர் அதிர்ச்சி

உ.பி.யில் பி.எட் , மதிப்பெண் சானறிதழில் மாணவர் புகைபடத்திற்கு பதிலாக நடிகர் அமிதாப் படத்தை ஒட்டி பல்கலை. நிர்வாகம் வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.

 

உ.பி. மாநிலம் பைசாபாத்தில் ராம்மனோகர் லோஹியா அவாத் பல்கலை. உள்ளது. இப்பல்கலை. கட்டுப்பாட்டில்உள்ள ரவீந்திரா சிங் சமார்க் மஹாவித்யாலயா கல்லூரியில் பி.எட்., படிப்பு தேர்வு எழுதிய மாணவர் தேர்வில் வெற்றி பெற்று அதற்கான மதிப்பெண் சான்றிதழை வாங்க கல்லூரிசென்றார்.

 

சான்றிதழை வாங்கிய மாணவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. சான்றிதழில் தனது புகைபடத்திற்கு பதிலாக பாலிவுட் நடிகர் அமிதாப்பின் புகைப்படத்தை ஒட்டியுள்ளது தெரியவந்துள்ளது.இது குறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தார்.

 

மாணவர் புகைபடத்திற்கு பதி்ல் நடிகர் அமிதாப் புகைப்படம் ஒட்டிய தேர்வு மைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் உறுதியளித்தார்.

 

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon