Primary Menu

Top Menu

October 20, 18

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் வங்கிகளின் வாராக்கடன் குறைந்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ஜேட்லி, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 36 ஆயிரத்து 551 கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 

நிர்ணயிக்கப்பட்ட 8 சதவீத பொருளதார வளர்ச்சி என்ற இலக்கு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

வங்கி கடன் மோசடி, கடன் ஏய்ப்பு செய்பவர்கள் மீது பொதுத்துறை வங்கிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

திவால் சட்டத்தின் வாயிலாக நடப்பு நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் மீட்கப்படும் என்று நிதி சேவைகள் செயலாளர் ராஜிவ்குமார் தெரிவித்தார்.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon