Primary Menu

Top Menu

September 22, 18

ஹைபர்சானிக் தொழில்நுட்பத்துடன் விண்ணில் சீறிப்பாயும் பயணிகள் விமானம்

விண்ணைக் கிழித்துக் கொண்டு சீறிப்பாயும் ‘ஹைபர்சானிக்’ தொழில்நுட்பத்துடன் கூடிய பயணிகள் விமானத்தை தயாரிக்க, ‘போயிங்’ திட்டமிட்டு உள்ளது.

 

உலகின் முன்னணி விமான நிறுவனம் போயிங். தலைமையகம் வாஷிங்டன். 2016 கணக்கின் படி, 750 பயணிகள் விமானங்கள், 180 ராணுவ விமானங்கள், 5 செயற்கைக் கோள்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் ‘ஹைபர்சானிக்’ பயணிகள் விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

 

‘ஹைபர்சானிக்’ என்பது ஒலியின் வேகத்தை விட, ஐந்து மடங்கு அதிகம்.’ஹைபர்சானிக்’ விமானத்தில் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து, பிரிட்டனின் லண்டனுக்கு, இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம்.

 

சாதாரண விமானங்களில், ஏழு மணி நேரம் ஆகும். இதனால் ஐந்து மணி நேரம், மிச்சமாகும். இந்த விமானம் மணிக்கு 6,125 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இது அட்லாண்டிக் பெருங்கடலை, 2 மணி நேரத்திலும், பசிபிக் பெருங்கடலை 3 மணி நேரத்திலும் கடந்து விடும்.

 

ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் இன்ஜின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஹைபர்சானிக் பயணிகள் விமானங்கள் உருவாக்கப்படுகின்றன.

 

இதுகுறித்து போயிங் தலைமை விஞ்ஞானி கெவின் பாவ்காட் கூறும்போது, ”இன்றைய தொழில்நுட்ப உலகில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமெனில் எவ்வளவு நேரம் ஆகும் என்று தான், பயணிகள் முதலில் கேட்கின்றனர்.

 

உலகம் முழுவதும் ஒரே நாளில் சுற்றிவர, ‘சூப்பர்சானிக்’ வேகம் கூட, இன்று குறைவாக தெரிகிறது. தொழிலதிபர்கள் மற்றும் ராணுவத்தினருக்கு நேரம் மிக முக்கியம். இதனை கருத்தில் கொண்டு, ‘ஹைபர்சானிக்’ பயணிகள் விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

 

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon