Primary Menu

Top Menu

September 24, 18

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது லோக் சபாவில் வாஜ்பாய் சொன்ன ஜோக்

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, லோக் சபாவில் வாஜ்பாய் சொன்ன ஜோக் இப்போது வைரலாகியுள்ளது.

இந்திரா காந்தி அணுவாயுத உற்பத்தி பற்றி லோக் சபாவில் விவாதித்தார். அணுவாயுதங்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இந்தியாவுக்கு இருப்பதாக அவர் வலியுறுத்தினார், ஆனால் அதை உற்பத்தி செய்ய உற்பத்தி இடம் இல்லை என்றார்.

அப்போது வாஜ்பாய் எழுந்து நின்று ஒரு கதையை சொன்னார்.

“காட்டிற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு வேட்டைக்காரன் வாழ்ந்துவந்தார்  அவர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமமும் சுடுவதற்கான சான்றிதழும் பெற்றிருந்தார், ஆனால் அவரிடம்  துப்பாக்கி இல்லை, ஒரு நாள் கிராமத்தினுள்ளே புலி நுழைந்தது. கிராம மக்கள் பயந்து அலறி வேட்டைக்காரனிடம் சென்று முறையிட்டனர். அதை கேட்ட வேட்டைக்காரன் தனது துப்பாக்கி  உரிமம் மற்றும் சான்றிதழை எடுத்துச் சென்றார். புலியிடம் சென்று “இதோ பார் புலி! நான் துப்பாக்கிக்கான உரிமமும் சுடுவதற்கான சான்றிதழும் வைத்திருக்கிறேன் அதனால் நீ ஓடி விடு ” என்று கூறி புலியை மிரட்டினார். இதை கேட்ட அடுத்த நொடியே புலி வேட்டைக்காரன் மேல் பயந்து கொன்றது.

இந்த கதையை கேட்டபோது, ​​இந்திரா காந்தி உட்பட முழு சபையும் சிரித்து மகிழ்ந்தார்கள். இதன் மூலம் வாஜ்பாய் ஓர் சிறந்த மனிதராக எல்லோர் மனதிலும் இடம்பெற்றுப்பதை அறிய முடிகிறது.

Comments

புதுச்சேரியில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் அறிமுகம்

புதியதாக அறிமுகப்படுத்துள்ள ஆயுஷ்மான்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon