Primary Menu

Top Menu

September 26, 18

காங்கிரஸ் கட்சி வெறும் வாய்பேச்சு மட்டுமே – அருண்ஜெட்லி தாக்கு

கிராமங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்த விவகாரங்களில் பிரதமர் மோடி திறம்பட செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.

 

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, தனது பேஸ்புக் பக்கத்தில் கிராமங்களின் வளர்ச்சி குறித்த போஸ்டை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

 

கிராமங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்த விவகாரங்களில், காங்கிரஸ் கட்சி வெறும் பேச்சு மட்டுமே பேசிவருகிறதே தவிர, சிறு நடவடிக்கைகளையும் அக்கட்சி தலைவர்கள் மேற்கொள்ளவில்லை.

 

பிரதமர் மோடியின் சீரிய நடவடிக்கைகளால், கிராமங்கள் நவீன வசதிகளை தொடர்ந்து பெற்று வருகின்றன. இதன்மூலம், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைய வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அதற்கென்று இலக்கு நிர்ணயித்து உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

 

இதன்காரணமாக, உலக வங்கியின் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் சிறந்த நாடுகள் பட்டியலில், இந்தியா, பிரிட்டனை முந்தும் என்று அந்த பேஸ்புக் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon