Primary Menu

Top Menu

October 16, 18

திறன் இந்தியா திட்டத்தின் தூதர்களாக பாலிவுட் பிரபலங்கள்

‘திறன் இந்தியா’ திட்டத்தின் துாதர்களாக, பாலிவுட் பிரபலங்கள், வருண், அனுஷ்கா சர்மா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர்.

 

திறமையான கலைஞர் களையும், தொழில் முனைவோரையும் ஊக்குவிக்கும் நோக்கில், திறன் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

 

குறும்படம் இந்த திட்டத்தை, மக்களிடையே பிரசாரம் செய்யும் துாதர்களாக, ஹிந்தி திரைப்பட நடிகர் வருண், நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, இவர்கள் இருவரும் இணைந்து நடித்த குறும்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

ஊசியும் நுாலும் – இந்திய தயாரிப்பு என்ற பெயரில், ஹிந்தியில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம், 28ம் தேதி வெளியாகிறது.

 

இது குறித்து, மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர்துறை அமைச்சரு மான, பா.ஜ.,வைச் சேர்ந்தவரு மான, தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள அறிக்கை:

 

சமூகத்துக்கு நல்ல தகவல்களை தரும் திரைப்படத்தில், பிரபல நடிகர்கள் நடிப்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆர்வம்இளைஞர்கள் அதிகம் உள்ள நாடுகளில், இந்தியாவும் ஒன்று.

 

தொழில் துவங்கும் ஆர்வத்துடன் உள்ள இளைஞர்களால் தான், நாடு வளர்ச்சி அடையும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon