Primary Menu

Top Menu

September 21, 18

புக் செய்த 2 மணி நேரத்திற்குள் டெலிவரி – அமேசான்

அமேசான் Prime Day நாட்களில், தாங்கள் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் போன்களை பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, 2 மணி நேரத்திற்குள்ளாக, அவை டெலிவரி செய்யப்படும் என, அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

வருகிற 16 மற்றும் 17ஆம் தேதிகளை Prime Day என அறிவித்திருக்கும் அமேசான் நிறுவனம், அன்றைய தினங்களில், தள்ளுபடி விலைகளில், OnePlus 6, MotoG, RealMe உள்ளிட்ட நிறுவன செல்போன்களை விற்பனைக்காக காட்சிப்படுத்த உள்ளது.

 

அன்றைய தினம், தாங்கள் காட்சிப்படுத்தும் செல்போன்களை பதிவு செய்யும் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு, இரண்டு மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படும் என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்த சேவை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மட்டுமே கிடைக்கும்..

 

காலை 6 மணி முதல், நள்ளிரவு 12 மணி வரை, அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 2 மணி நேர டெலிவரி சேவை கிடைக்கும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.

 

Comments

இலவச அரிசி வழங்கும் பணியில் புதுச்சேரி குடிமை பொருள் சுறுசுறு

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon