Primary Menu

Top Menu

September 25, 18

திமுக தலைமை பொறுப்புக்கு தகுதி இல்லாதவர் அழகிரி – சுப்பிரமணியசுவாமி

திமுகவுக்கு தலைமையேற்பதற்கு மு.க.அழகிரி தகுதி இல்லாதவர் என நாடாளுமன்ற எம்பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுப்ரமணியன் சுவாமி இதுதொடர்பாக மேலும் கூறியதாவது: ஸ்டாலின்தான் திமுக தலைமை தாங்க போகிறார் என்பது முடிவு ஆகிவிட்டது. அந்த பொறுப்பையும் விரைவில் அவர் ஏற்றுக் கொள்ளப்போகிறார்.

 

மு.க.அழகிரி கட்சி தலைமை தாங்க சரிபட்டு வரமாட்டார். இட்லி கடையை பிடுங்க மட்டுமே சரிப்பட்டு வருவார். வெற்றிடம் என்பது அனைவரும் கூறுவார்கள் ஆனால் தேர்தலில் மட்டுமே தெரியும்.

 

அதுமட்டுமல்லாமல் பாஜக தனியாக நின்று இந்துக்களோடு சேர்ந்து பிரச்சாரம் செய்தால் தான் தமிழகத்தில் வெற்றி பெற முடியும். ரஜினிகாந்த் பின்னாலும், கமல்ஹாசன் பின்னாலும் காக்கா பிடித்து சென்றால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று கூறினார்.

 

பாஜக நடிகர்களின் பின்னால் தான் செல்கின்றார்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த சுப்ரமணியன் சுவாமி, “இதுவரை தமிழகத்தில் அவ்வாறுதான் நடை பெறுகின்றது. இதைப் பற்றி நாங்கள் செயற்குழுவில் முடிவு செய்வோம்” என்று கூறினார்.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon