Primary Menu

Top Menu

October 16, 18

ஏர் இந்தியா நிறுவனம் 5 புதிய வழித்தடங்களில் விமான சேவை துவக்கம்

ஏர் இந்தியா நிறுவனம் வரும் தினங்களில் 5 புதிய வழித்தடங்களில் விமான சேவையை துவக்க உள்ளது.

 

இது குறித்து விமான நிறுவனம் கூறி இருப்பதாவது : வரும் 15-ம் தேதி கோல்கட்டா பாங்காங், கோல்கட்டா ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட உள்ளது.

 

16-ம் தேதி பெங்களூரு லண்டன் மற்றும் மும்பை பிராங்களினுக்கும் விமான சேவை இயக்கப்பட உள்ளது.

 

28-ம் தேதி மும்பை நியூயார்க்கிற்கு இடையே ஆறு நாள் சேவையாக விமானம் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

ஏர் இந்தியா நிறுவனம் மொத்தம் 120 விமானங்களை கொண்டுள்ளது. இவற்றில் 73 சிறிய விமானங்களும், 41 பெரிய அளவிலான விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

 

வரும் மாதங்களில் ஆறு ஏ.320 நியோஸ் வகை விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon