Primary Menu

Top Menu

October 22, 18

72 வயது பாட்டியின் மின்னல் வேக டைப்பிங் ! வீடியோ

வயதானாலும் இந்த பாட்டியின் மின்னல் வேக டைப்பிங் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஒரு டைப்-ரைட்டிங் மிஷனுடன் லட்சுமி வெர்மா(72) அமர்ந்து, வேலை செய்து வருகிறார். சமூக வலைதளங்களிலும், உள்ளூர் மீடியாவிலும் லட்சுமி வெர்மாவின் புகழ் பரவி வைரலாகியிருக்கிறது.

இதற்கு காரணம், ஒருவர் லட்சுமி வெர்மா செய்யும் டைப்பிங்கை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது டுவிட்டரிலும் வைரலானநிலையில் கிரிக்கெட் முன்னாள் வீரர் சேவாக்கும், தனது டுவிட்டர் பக்கத்தில் லட்சுமி குறித்து தகவலை பதிவிட்டார்.

அதில், ”என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு ஆச்சரியப் பெண்மணி. இவரிடம் இருந்து இளைஞர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். வேகத்தை மட்டுமல்ல, உற்சாகமான மனநிலை, கற்பதற்கும், செய்வதற்கும் வேலையோ, வயதோ தடையில்லை ஆகியவற்றைத் தான். இவருக்கு மரியாதையுடன் வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon