Primary Menu

Top Menu

September 25, 18

5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Verizon

அமெரிக்காவில் மொபைல் வலையமைப்பு மற்றும் இணைய சேவையினை வழங்கிவரும் பிரபல நிறுவனங்களுள் ஒன்றாக Verizon திகழ்கின்றது.

 

இந்நிறுவனம் இவ் வருட இறுதியில் இணைய வலையமைப்பில் 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

நேற்றைய தினம் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

 

இத் தொழில்நுட்பத்தினை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் அனுசரணையுடனேயே அறிமுகம் செய்யவுள்ளது.

 

இதனால் 5G தொழில்நுட்ப வலையமைப்பினை பயன்படுத்துபவர்களுக்கு இரு இலவச சேவைகளை வழங்க முன்வந்துள்ளது.

 

இதன் அடிப்படையில்YouTube TV அல்லது Apple TV 4K சேவையினை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

முன்னர் Houston, Sacramento, மற்றும் Los Angeles ஆகிய பகுதிகளில் இத் தொழில்நுட்பம் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது Indianapolis உம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon