Primary Menu

Top Menu

September 26, 18

50 ஆண்டுகள் திமுகவை கட்டி காத்தவர் கலைஞர் – ரஜினிகாந்த்

மறைந்த திமுக தலைவர் கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

 

தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் ஃபெப்சி அமைப்பின் சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

 

இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

நாசர், விஷால், ராதாரவி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலர் பங்கேற்று கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கலைஞர் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

 

 

நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, பல்வேறு சோதனைகள், சூழ்ச்சிகளை தாண்டி 50 ஆண்டுகள் திமுகவை கட்டி காத்தவர் கலைஞர் என்றார். எம்ஜிஆரையும், சிவாஜியையும் ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியது கலைஞரின் வசனம் என்று அவர் குறிப்பிட்டார்.

 

கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏற்றினர்.

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon