Primary Menu

Top Menu

September 26, 18

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த போலி பெண் டாக்டர் கைது !!

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த போலி பெண் டாக்டரை, போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கவும், போலி மருத்துவர்களை கண்டுபிடிக்கும் வகையிலும் தினமும் சுகாதார பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட செய்யது சாதிக் நகரில் டெங்கு அறிகுறிகளுடன் பள்ளி மாணவன் ஒருவன்  சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக  சுகாதார துறை துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் வட்டார சுகாதார  மேற்பார்வையாளர் சவுந்தரராஜன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மாணவன் வீட்டுக்கு அதிகாரிகள் சென்று, சிகிச்சை பெற்றது குறித்து விசாரித்தனர். அதில்,வீட்டின்  அருகில் உள்ள கிளினிக்கில் உள்ள பெண் டாக்டர் சிகிச்சை அளித்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் அந்த கிளினிக்கிற்கு சென்று விசாரித்ததனர். உரிய  அடிப்படை  இடவசதி இல்லாமலும், அந்த கிளினிக்கில் பெயர் பலகையும், விளக்குகள் ஏதும் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. அங்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த பெண்ணிடம், விசாரணையை தொடங்கினர். இதில் மாங்காட்டை சேர்ந்த சந்திரகலா (40). டாக்டருக்கு படிக்காமல், கடந்த 10  ஆண்டுகளாக அதே பகுதியில் தங்கி மருத்துவம் பார்த்தது தெரிந்தது . மேலும் உடல் நலக்குறைவால் வரும் பொதுமக்களுக்கு ஊசி, குளுக்கோஸ், தடுப்பு ஊசிகள் போட்டு வந்ததும்   தெரியவந்தது.

இதைதொடர்ந்து அதிகாரிகள், போலி பெண் டாக்டரை பிடித்து, மாங்காடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், சந்திரகலாவை கைது செய்தனர். இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். போலி டாக்டர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon