Primary Menu

Top Menu

August 16, 18

செவிலியர்களின் 32 ஆண்டுகள் கனவு நிறைவேறியது – புதுச்சேரி சுகாதாரத்துறை

நீண்ட கால கனவு நிறைவேறியதால், புதுச்சேரி செவிலியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில், 1,907 செவிலியர்கள், 104 தலைமை செவிலியர்கள், கிரேடு-2 செவிலியர் கண்காணிப்பாளர்-14, கிரேடு-1 செவிலியர் கண்காணிப்பாளர்-5 பேர் பணியாற்றி வருகின்றனர்.

 

நோயாளிகளுக்கான சேவை செவிலியர்களை, அதிகாரிகளை போன்று கவுரமாக அழைக்க ‘செவிலியர் அதிகாரி’ பெயர் மாற்றம் செய்ய கடந்த 1985ம் ஆண்டே மத்திய அரசு உத்தரவிட்டது.

 

மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் செவிலியர்களை, செவிலியர் அதிகாரியாக மாற்றி, மகிழ்ச்சியை கொடுத்தது.

 

ஆனால் புதுச்சேரி அரசு செவிலியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அவர்களை செவிலியர் அதிகாரியாக அங்கீகரிக்கவில்லை.

 

தற்போது, 32 ஆண்டுகளுக்கு பின், புதுச்சேரி செவிலியர்களின் கோரிக்கையை சுகாதார துறை நிறைவேற்றியுள்ளது. அவர்களது பதவியை செவிலியர் அதிகாரி என மாற்றியுள்ளது.

 

செவிலியர் (நர்சிங்) பணியிடங்கள், ‘செவிலியர் அதிகாரி’ என்றும், தலைமை செவிலியர் பதவி- ‘முதுநிலை செவிலியர் அதிகாரி’ என்றும் இனி அழைக்கப்பட உள்ளது.

 

இதேபோல், செவிலியர் கண்காணிப்பாளர் கிரேடு -2 பதவி, ‘உதவி செவிலியர் கண்காணிப்பாளர்’ என்றும், செவிலியர் கண்காணிப்பாளர் கிரேடு-1, துணை செவிலியர் கண்காணிப்பாளர் என்றும் அழைக்கப்பட உள்ளது.

 

செவிலியர் பதவியின் பெயர் மட்டுமே மாறியுள்ளதே தவிர, சம்பள உயர்வு என்பதெல்லாம் கிடையாது.

 

செவிலியர்களுக்கு மொத்தமே நான்கு கட்ட பதவி உயர்வு தான். செவிலியர்கள் 30 ஆண்டுகள் பணி புரிந்தால் தலைமை செவிலியராகவும், தலைமை செவிலியராக 10 ஆண்டுகள் பணி புரிந்தால், செவிலியர் கண்காணிப்பாளர் கிரேடு -2 பதவியும்,

 

செவிலியர் கண்காணிப்பாளர் கிரேடு -2 ஆக ஐந்து ஆண்டு பணி புரிந்தால் உச்சபட்சமாக செவிலியர் கண்காணிப்பாளர் கிரேடு -1 வரை அடைய முடியும். ஆனால் அதிகாரி நிலை பதவியை அடைவதற்குள் 45 ஆண்டுகள் உருண்டோடிவிடும்.

 

புதிய பெயர் மாற்றத்தினால் இனி அனைத்து செவிலியர்களும் செவிலியர் அதிகாரியாக மாறுகின்றனர். நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட கோரிக்கை நிறைவேறியுள்ளதால் செவிலியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon