Primary Menu

Top Menu

September 24, 18

23-ந்தேதி : இரட்டை இலை யாருக்கு என்பது தெரிந்துவிடும் !!

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு வழங்குவது? என்பது பற்றி தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய ஒன்றுபட்ட அணியும், மற்றும் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணியும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி, அதற்கு ஆதரவான ஆவணங்களை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்து உள்ளனர்.

இதுகுறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. நவம்பர் 10-ஆம் தேதிக்குள் தனது முடிவை அறிவிக்க இருக்கிறது. மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பான முதற்கட்ட விசாரணை கடந்த 6-ஆம் தேதியும் மற்றும் 2-ஆம் கட்ட விசாரணை நேற்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.

இதில் இரட்டை இலை சின்னம், கட்சி சின்னம் தொடர்பாக எடப்பாடி, டிடிவி தினகரன் அணியினர் நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் வாதிட்டனர். அதிகப்படியான கட்சி உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கே உள்ளது என்று எடப்பாடி – ஓபிஎஸ் அணியினரும், இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நிரந்தரமாக முடக்கி வைக்க வேண்டும் என டிடிவி தினரகன் அணியினரும் காரசாரமான வாக்கு வாதத்தை முன் வைத்தனர். இறுதியாக தேர்தல் ஆணையம் வரும் 23ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Comments

கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்!!

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon