Primary Menu

Top Menu

September 21, 18

லண்டனில் மூன்று பெண் சிங்கங்கள் இடையே நடந்த கால்பந்து போட்டி

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் தொடங்கிய நிலையில், இங்கிலாந்தில் லண்டன் நகரில் உள்ள வனவிலங்குப் பூங்காவில் ஆங்கிலேயர் கொடியுடன் மூன்று சிங்கங்கள் கால்பந்தாடின.

 

ஹெய்டி, இன்டி, ரூபி (heidi, indy , ruby ) என்ற மூன்று பெண் சிங்கங்களும் புதிய விளையாட்டுப் பொருளாக கிடைத்த கால் பந்தை பார்த்து இது இரையா, இரைச்சி உருளையா இல்லை ஏதும் வலையா என முகர்ந்துப் பார்த்து ஆய்வு செய்தன.

 

பின்னர் அதனை உருட்டி விளையாடின.

 

மூன்று பெண் சிங்கங்களுக்கு இடையே மோதல் வராமல் இருக்க நடுவராக ஓர் ஆண் சிங்கமும் களத்தில் குதித்தது. சிங்கங்கள் பந்தை உருட்டி விளையாடியது பார்வையாளர்களுக்கு உற்சாகம் அளித்தது.

 

Comments

இலவச அரிசி வழங்கும் பணியில் புதுச்சேரி குடிமை பொருள் சுறுசுறு

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon