Primary Menu

Top Menu

October 22, 18

கபிணி அணையிலிருந்து விநாடிக்கு 35000 கனஅடி நீர் திறப்பு

கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

கர்நாடக மாநிலம் வயநாடு, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

கபினி அணையின் மொத்த கொள்ளளவான 2284 அடியில் 2280 அடி நிரம்பி உள்ளது.

 

இதனால் நேற்று வரை கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் விநாடிக்கு 35,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

 

கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் 2 நாட்களில் கர்நாடக – தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என கூறப்படுகிறது.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon