Primary Menu

Top Menu

August 15, 18

டெல்லி முதல்வருக்கு ஆதரவாக களமிறங்கிய கமல்ஹாசன்!

டெல்லியில் IAS அதிகாரிகள் வேலைநிறுத்தத்தைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக கமல் ஹாசன் குரல் கொடுத்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது… “மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசில் தலையிடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது ஆகும் என மத்திய அரசினை கண்டித்து பதிவிட்டுள்ளார்.

 

மேலும் தற்போது டெல்லியில் நடப்பது தான் தமிழகம் மற்றும் புதுவையிலும் நடைப்பெற்று வருகிறது. இத்தகைய செயல்பாடுகள் மாற்றத்தை விரும்பும் பொதுமக்களுக்கு எரிச்சலூட்டக்கூடியதாக இருக்கும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதையடுத்து, IAS அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 3 நாட்களாக துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும், உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.

 

மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

இந்நிலையில் இவரது போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் ஆரதவு தெரவித்து டுவீட் செய்துள்ளார்.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon