Primary Menu

Top Menu

July 16, 18

100வது நாள் விழாவை புறக்கணித்த நிர்வாகி கமல்

மக்கள் நீதி மையம் கட்சியின், 100வது நாள் விழாவை, கமல் புறக்கணித்துள்ளார். நடிகர் கமலின், மக்கள் நீதி மையம் கட்சி துவங்கப்பட்டு, 100 நாட்கள் ஆகியுள்ளன.

 

இதை விழாவாக கொண்டாட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் விரும்பினர். ஆனால் துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், எந்த கொண்டாட்டமும் வேண்டாம் என, கமல் கூறி விட்டார்.

 

இந்நிலையில் 100வது நாள் விழாவை, கமல் கேக் வெட்டி, கொண்டாடிய தாக வெளியான தகவல் குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

 

நாங்கள், 100வது நாளை கொண்டாடுவதாக தான் இருந்தோம். ஆனால், துப்பாக்கி சூடு காரண மாக, எந்த கொண்டாட்டமும் வேண்டாம் என, கமல் கூறி விட்டார்.

 

ஒரு நிர்வாகி ஆர்வமிகுதியில் வாங்கி வந்த கேக்கை, வீணாக்க வேண்டாம் என, வெட்டியுள்ளார். மற்றபடி மக்கள் நீதி மையம் சார்பில், 100வது நாள் விழா எதையும் கொண்டாடவில்லை என்று அவர்கள் கூறினர்.

 

வைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்!

சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின்...

Leave a Reply