Primary Menu

Top Menu

September 25, 18

மக்கள் பிரநிதியாக நாளை பெங்களூரூ செல்கிறேன் – கமல்ஹாசன்

கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளைச் சந்திக்கவுள்ளார்.

 

நீண்ட அரசியல் குழப்பங்களுக்கு பிறகு கடந்த 23ம் தேதி கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதும் கர்நாடக சட்டப்பேரவையில் 117 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தார்.

 

பின்னர் முதல் சர்ச்சையாக மக்களின் ஆசீர்வாதத்தால் நான் முதலமைச்சராகவில்லை. ராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வரானேன் என்று பேசி அதிரவைத்தார்.

 

இருப்பினும், விவசாயிகளுக்கான கடன் 15 நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து அரசுப் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார்.

 

இதற்கிடையே, “காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதை நினைத்து கர்நாடக விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் பேசியிருப்பது தமிழகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

நீண்ட இழுபறிக்குப் பின்னர் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட உத்தரவு அரசிதழில் வெளியானது. இதனால் தமிழக மக்கள் சற்று நிம்மதியடைந்திருந்த நிலையில், சித்தராமையாவை போலக் குமாரசாமியும் பேசியுள்ளது தமிழக மக்கள் மத்தியில் காவிரி விவகாரத்தில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை நாளை சந்தித்துப் பேசவுள்ளார்.

 

இந்த சந்திப்பின்போது இருமாநில உறவு, காவிரி குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக குமாரசாமி பதவியேற்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்று வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

 

சந்திப்புக்காகப் பெங்களூரு செல்லும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்கள் பிரநிதியாக நமக்கு என்ன தேவை என்பதை கேட்கவே பெங்களூரு செல்கிறேன்.

 

மக்களின் கருத்துகளையே பிரதிபலிக்கிறேன், நானாக எந்தக் கருத்தையும் கூறுவதில்லை. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தி.மு.க மீண்டும் பங்கேற்கத் தீர்மானித்துள்ளது வரவேற்கத்தக்க முடிவு என்று கமல்ஹாசன் அவர்கள் கூறியுள்ளார்.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon