Primary Menu

Top Menu

October 21, 18

11 ஆயிரம் கோடி செலவில் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலை

11 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

 

டெல்லியிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

 

இந்த நெடுஞ்சாலையை திறந்து வைக்கும் பிரதமர் பின்னர் அதில் சிறிது தூரம் திறந்த ஜீப்பில் பயணிக்க உள்ளார். 135 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையில் விளக்குகள் சூரிய ஒளியில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்துக்கும் மழை நீர் சேமிப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

வாகனங்களின் வேகத்தை சிறப்பு கேமரா மூலம் கணக்கிட்டு அதன் மூலம் அதிவேகமாக செல்பவர்களுக்கு தானாக அபராத ரசீது உருவாக்கும் வசதியும் இந்த சாலையில் உள்ளது. மேலும் இச்சாலையில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

ஸ்மார்ட் நெடுஞ்சாலையில் இந்தியாவின் 36 நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலையால் தலைநகர் டெல்லியில் மாசு 27 சதவிகிதம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சாலை மூலம் டெல்லி – மீரட் இடையிலான பயண நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து 45 நிமிடங்களாக குறையும். மேலும் இமாச்சலில் இருந்து உத்தரப்பிரதேசம் செல்பவர்களும், ராஜஸ்தானில் இருந்து இமாச்சல் செல்பவர்களும் டெல்லிக்குள் வராமலேயே செல்ல முடியும்.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon