Primary Menu

Top Menu

October 21, 18

பிரதமர் மோடிக்கு ராகுல் விடுத்துள்ள ஃபியூல் சேலஞ்ச் ட்விட்

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி விடுத்துள்ள ஃப்யூல் சேலஞ்ச், இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பிட்னஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு, பிரதமர் மோடியை இந்த சேலஞ்சை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார்.

 

அதை ஏற்றுக்கொண்ட மோடி, விரைவில் எனது ஃபிட்னஸ் சேலஞ்ச் வீடியோவைப் பகிர்கிறேன் எனக் கூறியுள்ளார்.

 

தற்போது, இதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொண்டுவந்துள்ள ஃபியூல் சேலஞ்ச் (FuelChallenge) இந்திய அளவில் ட்ரெண்டாகிவருகிறது.

 

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி, அவர் இந்த சவாலை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், “கோலியின் ஃபிட்னஸ் சேலஞ்சை ஏற்றுக்கொண்டதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

 

நானும் அது போல சவால் விடுகிறேன். அது பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது.

 

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். இல்லையென்றால், நாடு முழுவதும் காங்கிரஸ் எழுப்பும் கிளர்ச்சிகள் உங்களை குறைக்க வைக்கும். உங்களின் பதிலை எதிர்பார்த்துள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

ராகுல் காந்தியின் இந்த ஃபியூல் சேலஞ்ச் சிறிது நேரத்திலேயே வைரலானதுடன், இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. பலரும் மோடிக்கு எதிராக இந்த ஃபியூல் சேலஞ்சைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon