Primary Menu

Top Menu

July 17, 18

ரஜினி , கமல் அரசியல் பிரவேசம் – பிரபல நடிகரின் கருத்து

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு, பிரபல ஹிந்தி நடிகரும், பா.ஜ., அதிருப்தி, எம்.பி.,யுமான, சத்ருகன் சின்ஹா அரசியல் என்பது, ரோஜாக்கள் நிறைந்த படுக்கை அல்ல,” என, அறிவுரை வழங்கியுள்ளார்.

 

பாலிவுட் நடிகரும், பா.ஜ., அதிருப்தி, எம்.பி.,யுமான, சத்ருகன் சின்ஹா, 71, மத்திய அமைச்சர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்தவர்.

 

தமிழகத்தில், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து, மும்பையில், நிருபர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டனர்.

 

அதற்கு அவர் கூறியதாவது: ரஜினி, கமல், இருவரும் என் நண்பர்கள். அவர்கள், தெளிவான திரைக்கதையோடு தான், அரசியல் களத்தில் குதித்திருப்பர் என, நம்புகிறேன். அவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு முன், என்னிடம் அறிவுரை கேட்கவில்லை.

 

ஒருவேளை கேட்டிருந்தால், அரசியலுக்கு வராதீர்கள் என கூறியிருப்பேன். அதில் இருக்கும் கண்ணி வெடிகள் குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருப்பேன்.

 

ஏனென்றால், அவர்கள் நினைப்பதை போல, அரசியல் என்பது ரோஜாக்கள் நிறைந்த படுக்கை அல்ல. தமிழகத்தில், ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது; அதை மீறி, இவர்களால் அரசியல் செய்ய முடியாது என்று அவர் கூறினார்.

 

வைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்!

சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின்...

Leave a Reply