Primary Menu

Top Menu

July 17, 18

நான் அரசியலுக்கு வருகிறேன்! – RJ பாலாஜியின் பாலிட்டிக்ஸ் ஆரம்பம்!

ஆர்.ஜே.பாலாஜி புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டுவந்த நிலையில், திரைப்படத்தின் வாயிலாக அரசியலுக்கு வரவுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

சிவப்பு, பச்சை, கருப்பு வண்ணத்தில் நடுவில் ஜல்லிக்கட்டு காளையுடன் கூடிய கொடியை சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டார். இதனால் ஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு வர இருப்பதாகவும், தனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, சமீபத்தில் டிடிவி தினகரன் அணியில் இருந்து வெளியேறிய நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து செயல்பட உள்ளதாக ஒரு வீடியோவை வெளியிட்டார். எனவே ஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு வருவது உறுதி என்று பேசப்பட்டது.

https://twitter.com/RJ_Balaji/status/997475636347207681

நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை இரவு 7:00 மணியளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டம் தொடங்கும் போது, எனது அடுத்தகட்ட பயணம் குறித்து கிரிக்கெட் வீரர்கள் அறிவிப்பார்கள்” என்று பாலாஜி கூறியிருந்தார்.

 

அதேபோல் இன்று 7:00 மணியளவில் தான் அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

 

ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்தபடம் அரசியல் காமெடி படம் என்று தெரியவந்துள்ளது. ‘LKG’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை பிரபு இயக்குகிறார்.

 

ஆர்.ஜே.பாலாஜி முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் அரசியல் சரவெடியா அல்லது காமெடியா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

வைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்!

சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின்...

Leave a Reply