Primary Menu

Top Menu

July 17, 18

குஷ்பு , நடிகை என்பதால் அரசியலில் நடிக்கத் தேவையில்லை – திருநாவுக்கரசர் சாடல்

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்புவுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது.

 

இருவரும் வசை மாரி பொழிந்து கொண்டு இருக்கின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் மாறப்போகிறார் என சில நாட்களுக்கு முன் குஷ்பு கூறியிருந்தார்.

 

இதற்கு பதிலடியாக, ‘நடிகை குஷ்பு, தி.மு.க.,வில் இருந்தபோது, அவர் மீது முட்டை மற்றும் செருப்பு வீசி, விரட்டி அடித்தனர். அங்கும் சும்மா இருக்காமல், வீண் வம்பு செய்ததாலேயே இதெல்லாம் நடந்தது.

 

காங்கிரசிலும் அதே நிலையை மேற்கொண்டிருக்கிறார். இங்கும் அவருக்கு அதே நிலை விரைவில் ஏற்படும்.

 

அவர் சினிமா நடிகை என்பதால், அரசியலில் நடிக்கத் தேவையில்லை’ என, திருநாவுக்கரசர் சாடி இருந்தார். இதையடுத்து, லண்டனில் இருந்த நடிகை குஷ்பு போன் மூலம் அளித்த பேட்டி:

 

தமிழக காங்கிரசுக்குள் நடப்பதைத் தான், நான் வெளிப்படையாக தெரிவித்தேன். அரசியலில், ஒளிவு மறைவு இல்லாமல் செயல்படும் சிலரில் நானும் ஒருத்தி.

 

டெல்லியில் இருந்து எனக்கு கிடைத்த தகவல்களை வைத்து தான், தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என தெரிவித்தேன்.

 

அது நடக்கப் போவதில்லை என்றால், தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒருவர், நாகரிகமாக பேசலாம். அதை விடுத்து, என்னை நடிகை என்பதால், தாறுமாறாக விமர்சிப்பது தவறு.

 

வைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்!

சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின்...

Leave a Reply