Primary Menu

Top Menu

August 15, 18

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை பறித்த நோட்டா

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில், நோட்டா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

 

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 38 சதவிகித வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சி முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் 36.2 சதவிகித வாக்குகளுடன் பாரதிய ஜனதா கட்சி உள்ளது.

 

மதச்சார்பற்ற ஜனதா தளம் 18.3 சதவிகித வாக்குகளை பெற்று மூன்றாவது இடம் வகிக்கிறது. சுயேச்சைகள் 3.9 சதவிகித வாக்குகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளனர்.

 

இதற்கு அடுத்தபடியாக நோட்டா 3,22,841 வாக்குகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. 0.9 சதவிகித வாக்குகளை பெற்றுள்ள நோட்டா சில தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை தட்டி பறித்துள்ளது.

 

நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகளுக்கு கிடைத்து இருந்தால் அவை கூடுதலாக சில இடங்களை பிடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon