Primary Menu

Top Menu

September 21, 18

சிங்கப்பூரில் தமிழ்மொழி நீடிக்க அரசு உறுதி

சிங்கப்பூரில், அதிகாரபூர்வ மொழியாக தமிழ் மொழி நீடிக்கும். தமிழ் மொழியை காப்பதற்கு, அரசு உறுதுணையாக இருக்கும்,” என, அந்நாட்டு, வர்த்தக உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர், ஈஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

 

இது குறித்து, அவர் கூறியதாவது: தமிழ் மொழிக்கு ஆதரவு என்பதில், அரசு உறுதியாக உள்ளது. இளைஞர்கள் தினந்தோறும், அதிகளவில் தமிழ் மொழியை பயன்படுத்தி, அந்த மொழிக்கு உயிரோட்டம் அளிக்க வேண்டும். தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை கொண்டாடுவதற்கும், ஊக்குவிப்பதற்கும், இளைய தலைமுறையினர் முயற்சி செய்ய வேண்டும்.

 

சிங்கப்பூரில், அதிகாரபூர்வ நான்கு மொழிகளில், தமிழ் மொழியும் ஒன்று. பள்ளிகளில் தாய் மொழியாகவும், தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ் மொழியும் இடம் பெறுகிறது. மேலும், அந்நாட்டு கரன்சியான டாலரிலும், தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Comments

இலவச அரிசி வழங்கும் பணியில் புதுச்சேரி குடிமை பொருள் சுறுசுறு

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon