Primary Menu

Top Menu

May 21, 18

சுயமாக சிந்தித்து பேசி செயல்படும் கூகுள் அசிஸ்டன்ட் ஆப்

கூகுள் அசிஸ்டெண்ட் (assistant) செயலி பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் புதிய இரு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

கூகுள் அசிஸ்டெண்ட் ஆப் அறிமுகம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும், போதிய வரவேற்பை பெறவில்லை. இந்த ஆப்பை பயன்படுத்தும் போது ஒவ்வொரு முறையும் ஓ.கே. கூகுள் அல்லது ஹே கூகுள் என கூறினால் தான் தகவல்களை பெற முடியும் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

 

தற்போது இதில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள் மூலம், ஓ.கே. கூகுள் அல்லது ஹே கூகுள் ஆகிய வார்த்தைகளை ஒரு முறை உபயோகித்தாலே போதும்.

 

நேற்று அமெரிக்காவில் நடந்த கூகுள் ”ஐஓ” சந்திப்பின் போது சுந்தர் பிச்சை, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கூகுள் அசிஸ்டென்ட் ஆப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், இந்த ஆப்ஸ் செயல்படும் முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் பற்றி சுந்தர் பிச்சை வெளியிட்ட வீடியோவில்,

 

கூகுள் அசிஸ்டன்ட் மூலம் ஒரு சலூன் கடைக்கு போன் செய்து முன்பதிவு செய்துள்ளனர். இந்த கூகுள் அசிஸ்டன்ட் அப்படியே மனித குரலில் மனிதர்கள் போலவே பேசி, முன்பதிவு செய்துள்ளது.

 

https://qz.com/wp-content/uploads/2018/05/google-duplex-1.mp3?_=1

 

மனிதர்கள் எந்த நேரத்தில் எப்படி குரலை மாற்றுவார்கள், கடைசி நேரத்தில் எப்படி திடீர் முடிவு எடுப்பார்கள் என்று இது யோசித்து பேசியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

https://qz.com/wp-content/uploads/2018/05/google-duplex-1.mp3

 

 

 

Partha

In4 Network Author

கீரிஸ் நகரின் ஆளூநரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்

கிரீஸின் இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி...

Leave a Reply