Primary Menu

Top Menu

July 17, 18

பணியாற்ற கடமை இருப்பினும் நேரம் கைகூடவில்லை – ரஜினிகாந்த்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அனைத்து நடிகர்களும் தங்களின் அரசியல் பயணத்தை தொடங்க ஆரம்பித்துள்ளனர்.

 

சூப்பர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பயணத்தில் பணியாற்ற கடமை இருப்பினும் அதற்கான சரியான நேரம் இன்னும் கைகூடவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் தென்னிந்திய நதிகளை இணைப்பது என் வாழ்நாள் கனவு எனவும் தெரிவித்தார்.

 

சென்னை நந்தனத்தில் நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: நான் நடித்து முடித்து விட்டேன் என 40 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களும், கடவுளும் என்னை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

தென்னிந்திய நதிகளை இணைத்த பின் நான் கண்ணை மூடினாலும் பரவாயில்லை. தண்ணீர் பிரச்னை என்றால் என்னை அறியாமலும் ஆர்வம் வந்துவிடுகிறது. கங்கை நதியை பார்ப்பதற்காகவே நான் இமயமலை செல்கிறேன்.

 

75 ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கும் கருணாநிதியின் குரலை கேட்க ஆவலாக இருக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். கருணாநிதியின் குரலை கேட்க மிக ஆவலாக உள்ளேன்.

 

புத்திசாலியுடன் பழகலாம்; அதிபுத்திசாலியுடன் பழகக்கூடாது. நல்லவனாக இருக்கலாம்; மிகவும் நல்லவனாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் கோழை. யார் என்ன சொன்னாலும் நான் என் பாதையில் தொடர்ந்து செல்வேன்.

 

கடமை இருப்பினும் சரியான நேரம் இன்னும் கைகூடவில்லை. நல்ல நேரம் வரும். தமிழகத்திற்கு நல்ல காலம் பிறக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

வைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்!

சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின்...

Leave a Reply