Primary Menu

Top Menu

September 21, 18

சுயதொழில் கடன் என்பது எட்டாக்கனியாக மாறும் பரிதாப நிலை!

சுயதொழில் மூலம் தொழில் முனைவோர்களாக மாற விரும்பும் இளைஞர்களுக்கு இன்று மாவட்ட தொழில் மையங்கள் எட்டா தூரத்தில் இருப்பதாக வேதனை குரல் எழுந்துள்ளது.

 

தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றும் வகையில் மாவட்ட தொழில் மையங்கள் மூலம் வங்கிகளிடம் கடன் பெற்று சுயதொழில் செய்யும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

 

மேலும், ஏற்கனவே உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளை நவீனப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்கான பணிகளையும், சிறு, குறு தொழிற்சாலைகளுக்கான அரசின் மானியத்தை பெற்று தருவது, நஷ்டத்தை சந்திக்கும் தொழில்நிறுவனங்களை தூக்கி நிறுத்தும் பணிகளை மேற்கொள்வது, ஏற்றுமதி வாய்ப்புகளை பெற்றுத்தருவது, சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது போன்ற பணிகளையும் மாவட்ட தொழில் மையங்கள் மேற்கொள்கின்றன.

 

ஒருகாலத்தில் இடைத்தரகர்களால் சூழப்பட்டிருந்த மாவட்ட தொழில் மையங்கள் அவர்கள் பிடியில் இருந்து விலகி மக்களை நெருங்கி வந்த நிலையில் மீண்டும் அவர்களை விட்டு விலகி செல்வதாக புகார் எழுந்துள்ளது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான சுயதொழில் கடனுதவி திட்டங்களில் உள்ளூர் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சிபாரிசுகளுடன் வருபவர்கள், வசதி படைத்தவர்களுக்கே சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

 

படித்த ஏழை இளைஞர்கள் வேலை தேடி அலையாமல் சுய தொழில் தொடங்குவதற்காக தொடங்கப்பட்ட இந்த தொழில் மையம் கமிஷன் வசூலிக்கும் மையமாக உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதனால் படித்த இளைஞர்களுக்கான சுயதொழில் கடன் திட்டங்கள் அனைத்தும் ஏழை இளைஞர்களுக்கு இன்றளவும் எட்டாக்கனியாகவே உள்ளது. இந்நிலையை மாற்ற மாவட்ட தொழில் மையங்களின் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

 

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு இல்லை மாவட்ட தொழில் மையம் மூலம் கோடிக்கணக்கில் இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த கடன் செல்வந்தர்களுக்குதான் அதிகளவில் வழங்கப்படுகிறது. கடன் தொகை பெறுவது குறித்து படித்த இளைஞர்கள் போதிய விழிப்புணர்வு இன்றி உள்ளனர்.

 

அதோடு கடன் தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால் யாரை அணுகி குறைகளை தெரிவிப்பது என்ற விழிப்புணர்வு இல்லாததால் ஏழ்மை நிலையில் உள்ள படித்த இளைஞர்கள் வளர்ச்சியடைய முடியாத நிலை உள்ளது.

Comments

இலவச அரிசி வழங்கும் பணியில் புதுச்சேரி குடிமை பொருள் சுறுசுறு

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon