Primary Menu

Top Menu

September 22, 18

பாலியல் குற்றங்களை கண்டித்து பெண்கள் நிர்வாண ஊர்வலம்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டிக்கும் பொருட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக இஸ்ரேலின் இரண்டாவது பெரிய நகரமான டெல் அவீவில் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Slut Walk என பெயரிடப்பட்டுள்ள குறித்த பேரணியில் பெண்கள் உரிமைகளை மீட்டெடுக்கவும், ஆடை கட்டுப்பாட்டை தடை செய்யவும் முழக்கங்கள் இட்டனர்.

 

அதுமட்டுமின்றி பெண்களுக்கான மரியாதையை அவர்களுக்கு வழங்குங்கள், அடிமையாக நடத்தாதீர்கள் எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.

 

கடந்த 2011 ஆம் ஆண்டு கனடாவில் பல்கலைக்கழக விழா ஒன்றில் பேசிய பொலிஸ் அதிகாரி, பெண்கள் பாலியல் தொழிலாளி போன்று ஆடை அணியக் கூடாது எனவும், பொறுப்பாக உடை அணிந்தால் பாலியல் துன்புறுத்தலில் சிக்காமல் தப்பலாம் என பேசியது மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 

பொலிஸ் அதிகாரியின் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த மாணவிகள் முதன் முறையாக அரை நிர்வாண போராட்டத்தை துவங்கி வைத்தனர்.

 

அதே ஆண்டு பிரித்தானியா தலைநகர் லண்டனில் இதுபோன்ற ஒரு அரை நிர்வாண போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்தனர்.

 

தொடர்ந்து அவுஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகள் பலவற்றிலும் பெண்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

பெண்களின் உடல் பொது சொத்து அல்ல எனவும், பெண்கள் எந்த உடை உடுத்தினாலும், என்ன பேசினாலும், என்ன கேட்டாலும் அவர்கள் விபச்சாரி என்ற ஒற்றை வார்த்தையால் ஒதுக்குகின்றனர்.

 

பெண்களை பலவீனமானவர்கள் என குறிப்பிடவே அவர்கள் விபச்சாரி என்ற வார்த்தையை கண்டுபிடித்துள்ளனர். இனி அது ஒருபோதும் விலை போகாது என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon