Primary Menu

Top Menu

September 25, 18

ஆதார் கார்டினால் கிடைக்கும் பலன் பெரியது – பில்கேட்ஸ்

ஆதார் கார்டினால் கிடைக்கும் பலன்கள் மிகப்பெரியவை. இதனை உலக நாடுகளும் பின்பற்ற வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவில் செயல்படுத்தப்படும் ஆதார் முறையால் கிடைக்கும் பலன்கள் மிகப்பெரியவை. பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதிலும், மக்களுக்கு அதிகாரமளிப்பதிலும் அரசாளுமையின் தரம் பெரும் பங்கு வகிக்கிறது.

 

ஆதாரை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும். இதற்காக, உலக வங்கிக்கு எங்கள் நிறுவனம் நிதியுதவி அளித்து வருகிறது. ஆதார் தொழில்நுட்பத்தால் தனிப்பட்ட உரிமைகளுக்கும், விவரங்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. அதன் மூலம் கிடைக்கக் கூடிய பலன்கள் ஏராளம்.

 

பிற நாடுகள் அப்படியே பின்பற்றுவதற்கு ஆதார் முறை உகந்தது தான். ஆதார் முறையை வளர்ந்த நாடுகள் உள்ளிட்ட எந்த நாடுகளும் இதற்கு முன்னர் பயன்படுத்தியது கிடையாது என்று பில்கேட்ஸ் கூறினார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon