Primary Menu

Top Menu

May 21, 18

மூன்றில் ஒன்று போலியானவை – சரிவை காணும் ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்கள் வாங்கும் மூன்று பேரில், ஒருவர் போலி பொருட்களையே பெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

மனிதர்களின் வாழ்க்கை இயந்திரமயமாக மாறியுள்ள நிலையில், அவர்களும் தங்களது தேவைகளை இருந்தஇடத்தில் இருந்தே நிறைவேற்றிக்கொள்ள தயாராகி விட்டனர்.

 

முன்பு, உயர் மதிப்பு கொண்ட பொருட்கள் மட்டுமே, ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்கும் என்ற நிலை மாறி, தற்போது பலசரக்கு பொருட்களும் ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கின்றன.

 

ஸ்மார்ட்போன்கள் முதல், துடைக்க பயன்படும் துடைப்பம் உள்ளிட்டவைகள் வரை தற்போது ஆன்லைன் ஷாப்பிங் மூலம் கிடைக்கின்றன.

 

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வர்த்தகமாகும் பொருட்களின் நம்பகத்தன்மை குறித்து வேலாசிட்டி எம்ஆர் என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. டெல்லி, மும்பை, பெங்களூரு, கோல்கட்டா, ஐதராபாத், சென்னை, ஆமதாபாத் மற்றும் புனே நகரங்களில் உள்ள மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

இந்த ஆய்வின் மூலம் ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்கள் வாங்கும் மூன்று பேரில், ஒருவர் போலி பொருட்களை பெறுவது தெரியவந்துள்ளது.

 

போலி பொருட்களை பெறும் வாடிக்கையாளர்கள், அதை தங்கள் நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கும் தெரியப்படுத்துவதால், யாரோ ஒரு போலி நிறுவனம் செய்த தவறுக்காக, ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகம், ஆண்டிற்கு 4 முதல் 5 சதவீதம் சரிவடைய வாய்ப்பிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Partha

In4 Network Author

கீரிஸ் நகரின் ஆளூநரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்

கிரீஸின் இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி...

Leave a Reply