Primary Menu

Top Menu

July 16, 18

சிறிய பட்ஜெட்டில் , பெரிய இலாபம் ஈட்டும் அடல்ட் படங்கள்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு டிரெண்ட் உருவாகும். அதாவது ஒரு பேய் படம் ஹிட்டானால், தொடர்ந்து பேய் படங்களை எடுப்பார்கள். அதேபோல ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட படம் ஹிட்டடித்தால் தொடர்ந்து கிராமத்து படங்களை எடுத்து தீர்ப்பார்கள்.

 

ஆனால், எப்போதும் நகைச்சுவை படங்களுக்கு தமிழ் சினிமாவில் மவுசு அதிகம். அது என்.எஸ்.கிருஷ்ணன் காலம் முதல் சந்தானம் காலம் வரை அதற்கான அங்கீகாரம் குறையவே இல்லை.

 

இந்த காமெடியில் பேயை முதலில் புகுத்தியது நடிகரும் இயக்குநருமான ராகவா லாரண்ஸ், “முனி”, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகியப் படங்கள்தான் முன்னுதாரணம். அதன், பின் சுந்தர்.சியின் “அரண்மனை” படமும் காமெடி கலந்த பேய் கதைதான். இந்தப் படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களை குஷிப்படுத்தும் வகையில் லாபம் ஈட்டியது. உடனே அதேபோன்ற பலப் படங்கள் வந்துப்போயின. அதில் சிலது வெற்றியும் பல தோல்வியும் கண்டது.

 

இதே காமெடி டிராக்கை வைத்துக்கொண்டு, அதில் அடல்ட் விஷயங்களை சேர்த்த இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் “த்ரிஷா இல்லனா நயன்தாரா” என்ற ‘காவியத்தை’ படைத்தார். வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு நன்றாகவே கல்லாக்கட்டிய இந்தப் படம், விமர்சகர்கள் மத்தியில் கடும் கண்டனக் குரல்களை பதிவு செய்தது.

 

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதீத சண்டைக்காட்சிகள் அல்லது கவர்ச்சி நிறைந்துள்ளது என்றால் ஏ சர்டிபிகேட் உடன் ரிலீஸ் செய்வது தான் மரபு. பாலச்சந்தர் காலத்தில் இருந்து, பாக்யராஜ், கமல் காலத்திலும் தொடர்ந்து, நம்ம எஸ்.ஜே.சூர்யா வரை அடல்ட் ஒன்லி சமாச்சாரங்களை வைத்து ஹிட் படம் கொடுத்துள்ளார்கள்.

 

ஏன், ஷங்கரின் “பாய்ஸ்” படம் கூட அப்படித்தான், செல்வராகவனின் “துள்ளுவதோ இளமை” படமும் அடல்ட் மூவி வகையிலேயே சேரும். ஆனால், அப்போதைய இயக்குநர்கள் இலை மறை காயாக சொன்ன விஷயங்களை, இப்போதைய இயக்குநர்கள் நேரடியாகவே சொல்கின்றனர். இதுதான் தமிழ் சினிமா அடல்ட் ஒன்லி படங்களில் மேற்கொண்டுள்ள பரிணாம வளர்ச்சி.

 

ஹாலிவுட்டா தமிழ் சினிமா?

 

தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டுக்கு நிகராக தமிழ் சினிமா உயர்ந்து வருகிறது. அதற்கு உதாரணம்தான் “பாகுபலி”, எந்திரன் 2.0 படங்களை ஒப்பிடலாம். ஆனால், அடல்ட் ஒன்லி ஜானர்களில் ஹாலிவுட்டுக்கு நிகராக செல்ல இளம் இயக்குநர்கள் திட்டமிட்டு படங்களை எடுத்து வருகிறார்கள். இது எத்தகைய அபத்தம் என இப்போதுள்ள இயக்குநர்களுக்கு புரியவில்லை.

 

ஹாலிவுட்டில் அடல்ட் காமெடி படங்கள் நிறைய வரும், அதுவும் ஹிட் அடிக்கும். ஏனோ நம் கோடம்பாக்கத்தில் பல இயக்குனர்கள் இந்த ஜானரை தொட்டதில்லை. பிளாக் அண்ட் வைட் காலத்தில் இருந்து தற்பொழுது உள்ள டிஜிட்டல் காலம் வரை இரட்டை அர்த்த வசனங்கள் பல படங்களில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் முழு அடல்ட் காமெடி படங்கள் குறைவுதான்.

 

“திரிஷா இல்லனா நயன்தாரா”, “ஹர ஹர மஹாதேவகி”, படங்களின் வெற்றிக்கு பின்பு, சில படத் தயாரிப்பாளர்கள் அடல்ட் காமெடி படம் இருக்கும் திசைக்கு தங்களது கவனத்தை திரும்பியுள்ளனர். ஏனென்றால் இளைஞர்கள்தான் டிக்கெட் விலையை பொருட்படுத்தாது தியேட்டர் வருபவர்கள், மேலும் படம் பிடித்து விட்டால் இவர்கள் ரீப்பீட் ஆடியன்ஸாக வரவும் செய்யவார்கள்.

 

இதன் விளைவுதான், இப்போது சந்தேஷ் பி.ஜெயகுமார் இயக்கி வெளியாக இருக்கும் “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படம். இந்தப் படம் “ஹாரர் அடல்ட் காமெடி” வகையை சேரும் என தெரிவித்துள்ளார். மேலும், குடும்பம் குடும்பமாக வரவேண்டாம், தனித்தனியாக வந்து படத்தை பாருங்கள் என்றும் இயக்குநர் கூறியுள்ளார். இவர் ஏற்கெனவே “ஹர ஹர மகாதேவி” என்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கியவர்தான்.

 

என்ன சொல்கிறார் இயக்குநர்?

 

‘இருட்டு அறையில் முரட்டு குத்து ’. அடல்ட் ஹாரர் காமெடி படம். இவர் ஏன் இது போன்ற படங்களை எடுக்கிறார்?, கருத்து சொல்லும் படங்களை எடுக்காமல் ஏன் இப்படியான படங்களை எடுத்து திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜானர்.

 

உலக சினிமாவில் எல்லா இடத்திலும் இருக்கிறது. தமிழில் இல்லை. இந்தப் படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக பார்த்தால் பொழுது போக்கு படமாக மட்டுமே தெரியும். அப்படித்தான் இந்தப் படத்தை பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

 

சரி, இயக்குநர் சொல்வதுபோல பார்த்தாலும், அனைவருக்குமான சினிமாக்கள் இப்போது எடுக்கப்படுவதில்லையா? பாகுபலி, பாகுபலி 2, விக்ரம் வேதா படங்களின் அதிரிபுதிரியாக வெற்றிப்பெற்ற படங்களை இளைஞர்களுக்கானது மட்டுமல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

 

சிறிய பட்ஜெட்டில், நிறைய லாபம் என்ற தயாரிப்பாளரின் தேவையை நிறைவேற்றுவதற்கே இதுபோன்ற படங்களை தாம் எடுப்பதாக சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஒத்துக்கொள்ள வேண்டும்.

 

சமூக அக்கறை துளியும் இல்லையா ?

 

“இருட்டு அறையில் முரட்டு குத்து” தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறான ஒரு கேள்வி இயக்குநரிடம் முன்வைக்கப்பட்டது, அதாவது “நாடு முழுவதும் இப்போது பாலியல் பலாத்காரங்கள்.. பெண்களுக்கெதிரான பாலியல் தொடர்பான குற்றங்கள், வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

 

இந்த நேரத்தில் இது போன்ற படத்தை எடுத்தால் எப்படி..?” என்ற கேள்விதான் அது. இதற்கு படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் அலட்சியமாக சொன்ன பதில், “அதான் படத்துலேயே சொல்லியிருக்கோமே ஸார்.. ‘சொந்தக் கைகளால் சொர்க்கம் காண்போம்’ன்னு..” இதன் மூலமாக இயக்குநர் என்ன சொல்ல வருகிறார்..?

 

இன்றைய தேதியில் தமிழ்த் திரையுலகம் சற்றே மோசமான சூழலில்தான் தவித்துக்கொண்டு இருக்கிறது. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அடல்ட் ஜானர் படங்களை இயக்குபவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உங்கள் திறமைகளை வெள்ளித்திரையில் காட்டிக்கொள்ளுங்கள், உங்கள் வக்கிரம் கூட திரையில் பிரதிபலிக்கலாம்.

 

ஏனென்றால் நீங்கள் எடுக்கும் படத்தை பார்க்க விரும்புவர்கள் பார்க்கட்டும் அதில் தவறில்லை. ஆனால், பொதுவெளியில் உங்களது ஆபாசம் விளம்பரத்துக்காக வெளியே வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். திரையில்தான் சமூக அக்கறையை காட்ட முடியவில்லை, நிஜத்திலாவது காட்டுங்கள்.

வைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்!

சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின்...

Leave a Reply