Primary Menu

Top Menu

September 21, 18

ஒரு மணிநேரத்தில் உலகை சுற்றி பார்க்கலாம் வாங்க..!

ஒரு மணி நேரத்துக்குள் உலகின் எந்த ஒரு இடத்துக்கும் சென்று விடும் பயணிகள் ராக்கெட் தொழில்நுட்பம், 2028க்குள் பயன்பாட்டுக்கு வரும் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன தலைவர் ஷாட்வெல் தெரிவித்து உள்ளார்.

 

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ் என்ற தனியார் நிறுவனம், விண்வெளி மற்றும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் பல்வேறு வியத்தகு சாதனைகளை புரிந்து வருகிறது. இதன் நிறுவனர் எலன் மஸ்க். 2002ல் இது துவக்கப்பட்டது.

 

எலக்ட்ரிக் கார், ஹைப்பர்லுாப் தொழில்நுட்பம், உலகின் மிகப்பெரிய ராக்கெட், விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் ராக்கெட், அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ராக்கெட் அனுப்பியதில் உதவி, என பல சாதனைகளை படைத்துள்ளது.

 

இந்நிலையில் விண்வெளிக்கு சென்று, பூமிக்கு திரும்பும் ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகளவில் பயணிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு ஏற்றிச்செல்லும் தொழில்நுட்பத்தை தயாரித்து வருவதாகவும் வரும் 2028க்குள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஷாட்வெல் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் கூறுகையில், ‘பி.எப்.ஆர். (பிக் பிங் ராக்கெட்) என அழைக்கப்படும் இந்த பயணிகள் ராக்கெட் மூலம் உலகின் எந்தவொரு பகுதிக்கும் ஒரு மணி நேரத்துக்குள் செல்ல முடியும். அதே போல இந்த ‘பி.எப்.ஆர்.,’ ராக்கெட்டின் அதி முக்கிய நோக்கம், சூரிய குடும்பத்தில் ஒரு கோளான செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவது தான்.

 

2022க்குள் சரக்குகளுடனும், 2024க்குள் மனிதர்களுடனும் செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பப் படும். ஒரு பயணத்தில் 80 முதல் 200 பேர் வரை செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல அடுத்த 10 ஆண்டுகளுக்குள் செவ்வாயில் குடியிருப்புகள் அமைக்கப்படும் என்றார்.

 

உதாரணமாக இந்த பயணிகள் ராக்கெட்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து லண்டன் செல்ல வேண்டுமெனில், நியூயார்க் கடல் பகுதியில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்துக்கு செல்ல வேண்டும். பின், பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படும் அந்த ராக்கெட் விண்வெளிக்கு சென்று, பிறகு லண்டன் கடல் பகுதியில் இருக்கும் இதே போன்ற ஏவுதளத்தில் தரையிறங்கும். இது விண்வெளிக்கு செல்லும் ராக்கெட் போலவே, செங்குத்தாகவே புறப்பட்டு அதே போலவே தரையிறங்கும்.

 

பி.எப்.ஆர்., ராக்கெட் மணிக்கு 29 ஆயிரம் கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. பி.எப்.ஆர்., ராக்கெட்டில் 100 பயணிகள் பயணம் செய்யலாம். 40 கேபின்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon